October 26, 2017 தண்டோரா குழு
அலாஸ்கா நாட்டின் விமானநிலையத்தில் விமான ஓடுபாதையில் இருந்த சுமார் 204 கிலோ எடையுள்ள நீர் நாய் கண்டுபிடிக்கப்பட்டது.
பொதுவாக அலாஸ்கா விமானநிலையத்தின் ஓடுபாதையில் பனிக்கரடிகள் அலைந்து திரிவது வழக்கம். ஆனால், நீர் நாய்கள் அங்கு இருப்பது அபூர்வமானது.
அலாஸ்காவின் வடக்கு பகுதியில் உள்ள ஆர்க்டிக் பெருங்கடல் கடந்த திங்களன்று(அக் 23) கடுமையான புயல் ஏற்பட்டது. இந்நிலையில், விமான ஊழியர்கள் ஓடுபாதையில் சுத்தம் செய்துக்கொண்டிருந்தபோது,204 கிலோ எடையுள்ள நீர் நாய் ஒன்றை கண்டுபிடித்தனர்.இதனையடுத்து விமான ஊழியர்கள், விலங்கு கட்டுபாட்டு துறைக்கு தகவல் தந்தனர். உடனே அவர்கள் வந்து அந்த நீர் நாயை அகற்றினர்.
பறவைகள்,பனிக்கரடிகள் போன்ற விலங்குகளை ஓடுபாதையில் விமான ஊழியர்கள் பலமுறை பார்த்துள்ளனர்.ஆனால், நீர் நாய் ஒன்று ஓடுபாதையில் இருப்பதை முதல் முறையாக ஊழியர்கள் பார்த்தது இதுவே முதல் முறை.
மேலும், விலங்குகளின் தாக்குதலால், விமான சேவைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் விமான போக்குவரத்துக்கு துறைக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. என்று விமானநிலையத்தின் அதிகாரி தெரிவித்தார்.