September 1, 2017 தண்டோரா குழு
தென் அமெரிக்காவிலுள்ள அமேசான் காடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் சுமார் 381 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமேசான் காடுகளில் ஒவ்வொரு இரண்டு நாட்களில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. மனிதர்களால் ஆபத்துகள் உண்டாகும் இடங்களில் புதிய மரம் மற்றும் விலங்குகள் இருக்கின்றன. கடந்த 1999ம் ஆண்டு முதல் 2௦15ம் ஆண்டு இடையே சுமார் 2,௦௦௦ வகையான புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று “Brazil Mamiruva Institute of Substantial Development” தெரிவிக்கிறது.
இதற்கு முன் 216 அரியவகை மரங்கள், 93 அரியவகையானமீன்கள், மற்றும் நிலத்தில் வாழும் உயிரினம், 2௦ பாலுட்டி இனம், 19 சிறிய வகை உயிரினம், ஆகியவை கண்டிபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மனிதர்கள் அந்த காடுகளை அளித்து விவசாயம் செய்து வருவதால், அங்கிருக்கும் மரங்கள் மற்றும் விலங்குகள் அழிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 381 புதிய உயிரினங்கள், மனிதர்கள் அழித்து வரும் இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காடுகளை அழிப்பதால், நமக்கு இதுவரை அறியாத உயிரங்கள் முற்றிலும் அழிந்து விடும்”