April 1, 2017 தண்டோரா குழு
இந்தியாவில் 3௦ சதவீத வாகன ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் இந்தியா ஹக்காதன் 2௦17 மாநாட்டின் கடைசி நாளில் அவர் பேசுகையில் “இந்தியாவின் 3௦ சதவீத வாகன ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை. இதை தொடர விடாமல் இருக்க, வாகன ஓட்டுனர் உரிமம் மின்னணு மூலம் பதிவு செய்யப்படும். வாகன ஓட்டுநர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மூன்றே நாளின் ஓட்டுநர் உரிமத்தை பிராந்திய போக்குவரத்து கழகம் காட்டாயமாக வழங்க வேண்டும்.
நாடு முழுவதிலும் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகங்களில் உரிமம் வைத்திருப்பவர்களின் தகவல் பாதுகாக்கப்படும். இதனால் யாரும் போலியான உரிமத்தை எங்கும் பதிவு செய்ய முடியாது. வாகன ஓட்டுநர் தேர்வில் வெற்றிபெறாமல், யாருக்கும் உரிமம் வழங்கப்படமாட்டாது.
இது வரை 28 வாகன தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் 2௦௦௦ தேர்வு மையங்கள் கட்டப்படும். ஆர்.டி.ஒ. அலுவலகம் 3 நாட்களுக்குள் ஓட்டுநர் உரிமம் வழங்கவில்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து சிக்னலில் கேமரா பொருத்தப்படும். அவ்வாறு செய்வதால், போக்குவரத்து போலீசார் மழையிலும் வெயிலிலும் சாலையில் பணி செய்வதை குறைக்கும். மேலும், 5௦ சதவீத சாலை விபத்துகளுக்கு சாலை பொறியாளர்கள் தான் காரணம். தவறான சாலை பொறியியல் வடிவமைப்புகள் கவலையை தருகிறது”.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.