• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜாகிர் நாயக்கின் என்ஜிஒ லைசன்சை புதுப்பித்தது யார்.3 உள்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

September 2, 2016 தண்டோரா குழு

மத போதகர் ஜாகீர் நாயக் நடத்தி வரும் என்ஜிஒவின் எப்சிஆர்ஏ என்று சொல்லப்படும் வெளிநாட்டில் இருந்து பணம் பெறுவதற்கான லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது.அவர் மீது தீவிர விசாரணை நடைபெற்று வரும் போது எப்படி என்ஜிஒ லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்ததையொட்டி,உள்துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் சுமார் 22 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.அந்தத் தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஒருவரும் பலியானார். இந்திய மத போதகர் ஜாகீர் நாயக்கின் சொற்பொழிவைக் கேட்டுத்தான் அவர் தீவிரவாதியாக மாறினார் என்று வங்கதேச அரசு கூறியது.

இதனையடுத்து,ஜாகீர் நாயக்கின் நடவடிக்கைகளுக்குக் கடுமையான நெருக்கடிகள் உருவாகின.மேலும், மகாராஷ்டிரா மற்றும் மத்திய அரசு, ஜாகீர் நாயக்கின் என்ஜிஓ நிறுவன நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

மேலும்,ஜாகீர் நாயக் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் முடிவில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜாகீர் நாயக் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில்,அவர் நடத்தி வரும் என்ஜிஓவின் எப்சிஆர்ஏ லைசன்ஸ் அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளதை கண்டுப்பிடிக்கப்படுள்ளது.அவருடைய நடவடிக்கைகள் தீவிர கண்காணிப்பிலும்,விசாரணையிலும் இருக்கும் போது, எப்படி அவர் நடத்திக்கொண்டிருக்கும் இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன் என்கிற என்ஜிஓ நிறுவனத்திற்கு லைசன்ஸ் புதுப்பிக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனையடுத்து,உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த இணை செயலாளர் ஜிகே திவேதி, மற்றும் இரு துணை செயலாளர்கள் என்று 3 அதிகாரிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க