• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியருக்கு விருது

January 31, 2022 தண்டோரா குழு

கோவை குறிச்சி சிட்கோ பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் வில்சன்.கோவை சுங்கம் பகுதியில் உள்ள கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் ஆசிரியரான இவர் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தில் சிறப்பு வகுப்புகள் எடுத்து வந்துள்ளார். ஆசிரியர் துறையில் மூன்று கவுரவ டாக்டர் பட்டங்களையும்,13 சர்வதேச விருதுகள் மற்றும் அமைதிக்கான சர்வதேச தூதுவர் என பல்வேறு விருதுகளை பெற்றவர்.

இந்நிலையில் கல்வித்துறையில் 32 கால இவரது சேவையை பாராட்டி ஐ.கே.செவன் உலக சாதனை புத்தகம் இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.இதற்கான விழா ஆவராம்பாளையம் கோ.இண்டியா அரங்கில் நடைபெற்றது.இதில் 9 பட்டபடிப்புகளை படித்து கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் ராபர்ட் வில்சனுக்கு விருது வழங்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் ராபர்ட் வில்சன்,

கல்வித்துறை மட்டுமின்றி சமூகத்தில் பல்வேறு சமுதாய பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர்,குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக,இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது,கல்வியறிவு இல்லாத ஏழை குடும்பத்தினருக்கு இலவச பட்டா கிடைக்க உதவி செய்வது,பல்வேறு துறைகளில் ஏழை மாணவ,மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுப்பது, என பல்வேறு சமூக பணிகளை செய்து வருவதாக கூறிய அவர்,தமக்கு வழங்கிய இது போன்ற விருதுகள் தமது சமூக சேவை பணிகளை செய்ய மேலும் ஊக்கப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க