August 3, 2017 தண்டோரா குழு
ஜெனீவாவில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஜெர்மன் நாட்டை சேர்ந்தவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 25-ம் தேதி, ஆல்ப்ஸ் மலையின் லாக்கின்ஹோர்ன் என்னும் பகுதியில் 2 பேர் மலை ஏறியுள்ளனர். மலை சிகரத்தை அடையும் சிறிது தூரத்திற்கு முன்னதாக அவர்கள் ஒரு மனிதரின் கை மற்றும் காலணிகளை பார்த்துள்ளனர்.இதுக்குறித்து காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளனர். மீட்பு பணியினர் அந்த மலைபகுதிக்கு சென்று, அந்த மனிதருடைய உடலை அங்கிருந்து எடுத்து, பெர்ன நகரின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த உடலை பரிசோதனை செய்ததில் அதற்கு வயது 74 இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த உடல் கடந்த 1987-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி அல்ப்ஸ் மலையில் ஏறி காணாமல் போனவரின் உடல் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில், 1942-ம் ஆண்டு அல்ப்ஸ் மலையில் ஏறி, சுமார் 70 ஆண்டுகள் காணாமல் போன தம்பதியினருடைய உடல் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.