January 8, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 20 வார்டுகளில் உள்ள 30 ஆயிரம் வீடுகளுக்கு விரைவில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த அதிகாரி கூறியதாவது:
கோவை நஞ்சுண்டாபுரத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து கோவை மாநகராட்சிக்குட்பட்ட 20 வார்டுகளில் நல்லம்பாளையம், ரத்தினபுரி, கணபதி, ஆவாரம்பாளையம், காந்திபுரம், ரேஸ் கோர்ஸ், பி.என். பாளையம், புலியகுளம், சுங்கம், ஒலிம்பஸ், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்கட்டமாக 30 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம்.
நஞ்சுண்டாபுரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 40 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.