May 22, 2017 தண்டோரா குழு
மத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனை சட்டத்தைக் கண்டித்து தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் வரும் 30-ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மத்திய அரசின் இச்சட்டத்தைக் கண்டித்து தமிழகத்தில் சுமார் 30 ஆயிரம் மருந்துக்கடைகளும் அகில இந்திய அளவில் சுமார் 8 லட்சம் கடைகளும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாக தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வர காரணம், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கக் கோரி கோரிக்கைகள் எழுந்தன. இதனை அடுத்து மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைத்த கமிட்டி ஆய்வு செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
அதன் அடிப்படையில் ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.