April 7, 2016 முகமது ஆஷிக்
நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதிக்காக வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மிகப்பெரிய அளவில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்த தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள விஷால் அணி முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களின் பெயர்கள் ஒவ்வொரு அணிக்கும் வைக்கப்பட்டுள்ளது.இந்த 8 அணிகளுக்கும் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், ஆர்யா, விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்திய அளவில் இருந்து அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் போன்ற சூப்பர்ஸ்டார்கள் இதில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள். ரஜினி, கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களும் இதில் பங்கேற்கிறார்கள்.
இதுமட்டுமின்றி விளம்பர தூதர்களாக அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் இக்கிரிக்கெட் போட்டியின் மொத்தம் உரிமையையும் சன் தொலைக்காட்சி நிறுவனம் 9 கோடிக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட ரசிகர்களிடமிருந்து பணம் வாங்கி தான் கட்டிடம் கட்ட வேண்டுமா? ஏன் கோடிக்கணக்கில் பணம் வாங்கும் நடிகர்களிடம் பணம் இல்லையா? என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதங்கங்ககளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சென்னை, கடலூர் வெள்ளத்தில் மூழ்கிய போது நடிகர் சங்கம் என்ன செய்யமுடியும் என்ற கேட்ட நடிகர் சங்க தலைவர் நாசர் இப்போது அந்த நடிகர் சங்க கட்டிடம் கட்ட மக்களிடம் பணம் கேட்பது விசித்திரமாகா உள்ளது ரசிகர்கள் என குற்றம் சாற்றுகின்றனர்.
இதுதவிர, தமிழகத்தில் எய்ட்ஸ், புற்றுநோய் என பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள் அவர்கள் சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் இருந்தும் போகிறார்கள். ஆனால், அவர்களின் மருத்துவ வசதிக்காக இதுபோன்ற போட்டி நடத்தி இருந்தால் அதனை நாங்கள் வரவேற்றிருப்போம் என்றும் அன்றாடம் தன் குடும்ப செலவுக்காக சம்பாதிக்கும் மக்களிடம் பணம் பறிப்பது முட்டாள் தனம் ஆகையால் நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியை புறக்கணிப்போம் எனச் சமூக வலைதளைங்களில் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறனர்.
ஆனால், நடிகர் சங்கம் கிரிக்கெட் தொடரில் பங்கேற்குமாறு விடுத்த அழைப்பை நிராகரித்த அஜித் நடிகர் சங்க கட்டடம் கட்ட பொதுமக்களிடம் நிதி திரட்ட கூடாது எனவும் கூறியுள்ளார். நடிகர் அஜித்திற்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு தல இல்லாத இடத்தில் தனக்கு என்ன வேலை என்கிற பாணியில் தானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளார்.