September 27, 2017 தண்டோரா குழு
சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான உரிமை வழங்க அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில், பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுவரை ஆண்கள் மட்டுமே கார் ஓட்ட உரிமம் வழங்கப்பட்டது.ஆனால், தற்போது சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான உரிமைகளை வழங்க அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.
சவூதி நாட்டின் பெண்களுக்கு கார் ஓட்டும் சம உரிமை வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், இந்த புதிய நடைமுறை 2018ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளது.