June 7, 2017 தண்டோரா குழு
உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒன்று அல்ல இரண்டு அல்ல மொத்தம் 38 குழந்தைகள் உள்ளன.
கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் கபிம்பிரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மரியம் நபடன்சி என்பவருக்கு 38 குழந்தைகள் உள்ளன. தன்னுடைய 13வது வயதில் திருமணம் செய்து கொண்டுள்ள இவருக்கு ஒவ்வொரு பிரசவத்திலும் இரண்டு,மூன்று மற்றும் நான்கு குழந்தைகள் என்று பிறந்துள்ளது.ஆரம்பத்தில் மரியத்திற்கு 44 குழந்தைகள் இருந்துள்ளது. இதில், 6 குழந்தைகள் இறந்துவிட்ட நிலையில் தற்போது 38 குழந்தைகள் இருக்கிறதாம்.
இது தொடர்பாக ஜாய் டோரியன் டுவிட்டரில் கூறுகையில்,
“மரியமுக்கு முதலில் 8 குழந்தைகள் பிறந்தன. அந்த 8 குழந்தைகளும் இரட்டையைர்கள்.மரியம் ஹைபெர் ஓவலேஷன் என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதால் கருப்பைகள் ஒவ்வொரு சுழற்சியிலும் ஒரு முட்டைக்கு மேல் வெளியேறுமாம். இதன் காரணமாகத்தான் மரியத்திற்கு, ஒவ்வொரு பிரசவத்தின் போதும் இரண்டு, மூன்று மற்றும் நான்கு குழந்தைகள் வீதம் பிறந்துள்ளது.
மேலும் இவர் எத்தனை வலுவாக இருக்கிறார் என்பதையும் அவருடைய குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியமாக இருகிறார்கள் என்பதை பார்க்கும்போது ஆச்சரியம் அடைந்தேன்” என்று கூறினார்.