May 9, 2017
தண்டோரா குழு
உலகிலேயே அதிக உடல் பருமன் கொண்ட பெண்ணான இமான் அஹமத் இருதயம் மற்றும் சிறுநீர் கோளாறு ஆகிய உபாதைகளால் அவதிப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
எகிப்து நாட்டின் அலெக்ஸ்யேண்ட்ரியாவை சேர்ந்த இமான் அஹ்மத்(36) உலகிலேயே அதிக உடல் பருமன் கொண்ட பெண் என்று கருதப்படுபவர். அவருடைய உடல் பருமனை குறைக்க மும்பை சைபீ மருத்துவமனையில் பிப்ரவரி மாதம் சேர்க்கப்பட்டார். அப்போது அவருடைய உடல் எடை 5௦௦ கிலோவாக இருந்தது. மூன்று மாதம் சிகிச்சைக்கு பிறகு அவருடைய உடல் எடை 17௦ ஆக குறைந்தது.
மேலும், அவர் சிகிச்சைக்காக அபு தாபியிலுள்ள விபிஎஸ் புர்ஜீத் மருத்துவமனைக்கு மும்பையிலிருந்து அபு தாபிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது இமான் அஹ்மத் இருதயம், சிறுநீரகம் கோளாறுகள் மற்றும் படுக்கை புண்களால் அவதிப்பட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
“அவருக்கு உணவு கட்டுபாடுகள் குறித்து, நாங்கள் சிறப்பு மட்டும் நீரிழிவு உணவு நிபுணர்களுடன் சேர்ந்து ஆலோசானை மேற்கொண்டுள்ளோம். அவரை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். மும்பையில் ஆரம்பித்த சிகிச்சையை முழுமையாக முடிக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம்” என்று விபிஎஸ் புர்ஜீத் மருத்துவமனையின் தலைமை அதிகாரி டாக்டர் யாசின் எல் ஷாஹத் தெரிவித்துள்ளார்.