December 16, 2016 தண்டோரா குழு
புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் தங்கு தடையின்றி அனைத்து இடங்களிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது . 50 சதவீத பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்பட்டுள்ளன என மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
முதல்முறையாக புதிய ரூபாய் நோட்டுகள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டது. இவை அனைததும் 100 சதவீதம் பாதுகாப்பானவை கள்ள நோட்டுகள் அச்சடிக்க வாய்ப்பில்லை. ரூ.500 நோட்டுகள் அச்சடிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 50 சதவீத பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்பட்டுள்ளன.
மத்திய கூட்டுறவு வங்கிகளில் போதிய பணம் கையிருப்பு இருப்பு உள்ளதா என உறுதி செய்யப்படுகிறது. புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு கிடைப்பது இல்லை என புகார்கள் வந்துள்ள இடங்களில் உடனுக்குடன் செயல்பட்டு நிலைமையை சீர் செய்கிறோம். புதிய ரூபாய் நோட்டுகள் விநியோக பணி தங்கு தடையின்றி அனைத்து இடங்களிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கள்ள நோட்டு புழக்கம் குறைந்திருக்கும் என உறுதியாக நம்புகிறோம். பங்குச் சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை ரூ.2 ஆயிரத்தை கொண்டு சரி செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது.
வங்கிகளில் பணப்பரிமாற்றம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவையான இடங்களுக்கு விமானம் மூலம் பணம் அனுப்பி வைக்கப்படுகிறது. சட்ட விரோதமான பணம் உள்ளே வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பணம் எளிதாக கிடைக்க தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.