March 3, 2016 kiwikidsnews.co.nz
நெதர்லாந்த் தேசத்தின் ஆற்றுப்படுகைகளில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்ட கப்பல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
20 மீட்டர் உயரமும் 40 டன் எடையைக் கொண்ட இந்தக் கப்பலை, கட்டுமான தொழிலாளர்கள் காம்பேன் என்னும் இடத்தில் உள்ள ஒரு துறைமுகத்தை தூர்வாரும்போது கண்டுப்பிடித்தனர்.
வடகடலுக்கும் பால்டிக் கடலுக்கும் இடையே டென்மார்க் வழியாக வர்த்தக கப்பலாக இது பயன்படுத்தப்பட்டது என்றும் கருதப்படுகிறது.
கடலுக்கடியில் இருந்து அந்தக் கப்பலை வெளியே கொண்டுவர தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உலோக சட்டங்கள் மற்றும் பட்டைகளை பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வளவு நன்றாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு பழமையான கப்பலை கண்டுபிடிப்பது மிகவும் அரியச் செயலாகும். மேலும், இந்தக் கப்பலின் பின் புறத்தில் செங்கல் வளைவு அடுப்பும் பளப்பான ஓடுகளும் அப்படியே இருக்கிறது.
அதை முழுவதும் மீட்டப்பிறகு, அப்படியே பாதுகாக்க இந்தக் கப்பலை ஈரமாகவே வைக்கப்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.