• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

52½ லட்சம் புது ரூபாய் நோட்டுகள் பறிமுதல் கேரளத்தில் 3 பேர் கைது

January 16, 2017 தண்டோரா குழு

கேரளத்தில் இருவேறு இடங்களில் கணக்கில் வராத புதிய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் சென்றதாக மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ. 52.50 லட்சம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் ஞாயிறன்று கூறியதாவது:

கேரளத்தில் கோழிக்கோட்டிலிருந்து மஞ்சேரிக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த கேரளா இரு இடங்களில் 52 ½ லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 15) 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கேரளா காவல்துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம்(ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 15) கூறியதாவது:

கேரளாவின் கோழிக்கோடு-மஞ்சரி நெடுஞ்சாலையில் உள்ள வள்ளுவம்புரம் என்னும் இடத்தில் நடந்த வாகன சோதனையில்,கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஃபஸ்லூர் ரஹ்மான் (3), உன்னிமோயி (52) ஆகியோரிடம் இருந்த பைகளை போலீசார் திடீரென்று சோதனையிட்டனர். அதில் மொத்தம் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் இருந்ததைப் பறிமுதல் செய்தனர்.

இருவரையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதைப் போல, மஞ்சேரி காவல் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்துக்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஜஷ்மீர் (22) என்பவரை நிறுத்தி, விசாரணை செய்யப்பட்டது. அவரிடமிருந்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட ஜஷ்மீரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அந்தக் காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க