August 3, 2016 தண்டோரா குழு
கனடாவின் மிசிசாகாவில் உள்ள பெல் நிறுவனம், நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாம் தலைமுறைக்கான 5G தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.
இதன் மூலம், கனடாவின் தற்போதைய சராசரி இணையதளமான 4G வேகத்தை விட ஆறு மடங்கு இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்கும். மேலும், கனெக்டிவிட்டி பிரச்சனைகள் பெரிய அளவில் 5Gயில் குறைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர் பெல் நிறுவனத்தினர்.
மேலும், அலைக்கற்றை 73 கிகா ஹெர்ட்ஸ் ஆக கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தங்களின் இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாகவும் அறிவித்துள்ளனர்.
இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள பெல் நிறுவனம், இந்த ஆராய்ச்சியானது அடுத்த தலைமுறைக்கான இணையதள வேகத்தை உறுதி செய்யும்.
ஏன்ஜிஎம்என் (NGMN) கூட்டமைப்பின் குறிக்கோள்களை 2020ம் ஆண்டுக்குள் அடைந்திட வழிவகுக்கும் என்று தெரிவித்தனர்.
இன்னும், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதால், இந்த 5G தொழில்நுட்பம் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும் என்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.