November 21, 2016 தண்டோரா குழு
அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளில் 6.4 ரிக்டர் அளவில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) அன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் ஞாயிற்றுக் கிழமையன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டின் தலைநகரான புஏனோஸ் ஏர்ஸ்ஐ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. அதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து அலறியடித்தபடி மக்கள் வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
அர்ஜென்டினாவின் சான்ஜியான் மாநிலத்தை குலுக்கிய பூகம்பம் அந்நாட்டின் உள்ளூர் நேரத்தின் படி 1757 மணிக்கு தாக்கியது. பூமிக்கு அடியில் 130 கிலோ மீட்டர் ஆழத்தில் (80 மைல்) நிலநடுக்கம் உருவானதாக அர்ஜென்டினா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடான சிலியிலும் எதிரொலித்தது. அங்கும் வீடுகள் குலுங்கின. சிலி மற்றும் அர்ஜென்டினாவில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது என்று தேசிய அவசர நிலை அலுவலக (ONEMI) அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிலி நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள அடகாமா, கோகுலிம்போ, வால்பரைஸோ, ஓ’ஹிக்கின்ஸ், சாண்டியாகோ மெட்ரோ பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.சான்ஜியான் மாகாணத்தில் செல்லுலார் தொலைபேசி சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.