• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

60 வது வார்டை தூய்மை பகுதியாக அனைத்து வார்டுகளுக்கும் முன்மாதிரியாக மாற்றுவேன்

February 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 60 வது வார்டை தூய்மை பகுதியாக அனைத்து வார்டுகளுக்கும் முன்மாதிரியாக மாற்றுவேன் என 60 வது வார்டில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் டாக்டர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க.தனியாக தேர்தலை சந்தித்து,கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பா.ஜ.க.வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்..இதில் கோவை மாநகராட்சி 60 வது வார்டில் டாக்டர் லோகநாதன் பா.ஜ.க.வேட்பாளராக தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

மருத்துவரான இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளால் அடிப்படை தேவைகள் சரியான முறையில் வார்டுகளில் நிறைவேற்றப்படவில்லை எனவும், இந்த தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்தார்.

தாம் வெற்றி பெற்றால்,வார்டு பகுதியை தூய்மையாக மாற்றி,அனைத்து வார்டுகளுக்கும் முன்மாதிரி வார்டாக மாற்றுவேன் என உறுதியளித்தார்.தொடர்ந்து அவர்,மத்திய அரசின் திட்டங்களை வார்டு பகுதி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க