April 12, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் உள்ள இல்லினோயிஸ் மாகாணத்தின் ஸ்ப்ரிங்பீல்ட் நகரில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் 195௦-ம் ஆண்டு, ஒன்றாக படித்த ஜோயிஸ் கேவோர்கியன் மற்றும் ஜிம் பௌமன் 64 ஆண்டுகளுக்கு பிறகு அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகிழ்ச்சியால் திருமணம் செய்துக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் ஒன்றாக படித்த வந்த காலத்தில் அவர்களுடையே காதல் மலர்ந்தது. ஆனால், தங்களுடைய கல்லூரி படிப்பிற்காக வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்ததால் இருவரும் பிரிய நேர்ந்தது.
வெவ்வேறு கல்லூரியில் படித்த இருவரும், தங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துகொண்டனர். ஆண்டுகள் செல்ல செல்ல இருவரும் தங்கள் வாழ்க்கை துணையை இழந்துவிட்டனர். இதனிடையே பௌமன் மீண்டும் ஸ்ப்ரிங்பீல்ட் நகருக்கு திரும்பி வந்து, அங்கேயே வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர்கள் படித்த பள்ளியில், பழைய மாணவர்கள் சந்திப்பு விழா நடத்துவது வழக்கம். இந்தாண்டு அவ்விழாவை நடத்த அப்பள்ளி ஏற்பாடு செய்ததது. அந்த விழாவிற்கு தேவையான திட்டங்களை வகுக்க தன்னுடைய முன்னாள் காதலியின் உதவியை நாடி ஜோய்ஸுக்கு தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டார் பௌமன்.
ஜோய்சை நேரடியாக சந்திக்க முடிவெடுத்து அவரை சந்திக்க பௌமன் சென்றுள்ளார். அவர்களுடைய ஏற்பட்ட தொடர்ச்சியான சந்திப்பு மீண்டும் காதலை உண்டாக்கியது. இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்தனர்.
அமெரிக்கா இன்டியான மாகணத்தின் சவுத் பேன்ட் பகுதியிலுள்ள ஹோலி கிராஸ் கிராமத்தில் ஏப்ரல் 1-ம் தேதி செய்துக்கொண்டனர். இருவருக்கும் தற்போது 81 வயது ஆகிறது.
ஜோய்ஸின் பேரன் ஹாரிஸ் கூறுகையில், “5 ஆண்டுகளுக்கு முன் தாத்தா காலமானார். அவருடைய மறைவிற்கு பிறகு, பாட்டி மிகவும் சோகமாகவே இருந்தார். ஆனால், பௌமன் அவரை தொடர்புக்கொண்ட பிறகு, அவர் பழைய நிலைக்கு திரும்பினார்.
அவர்களுடைய திருமண நிகழ்ச்சி இதயத்திற்கு இதமாக இருக்கிறது. மாப்பிள்ளையின் தோழன் மற்றும் மணப்பெண்ணின் தோழி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்து செய்திகளை தெரிவித்தனர். அதன் பிறகு, கணவனும் மனைவியும் தங்கள் தேனிலவிற்கு சென்றுவிட்டனர். பௌமன் என் பாட்டியின் வாழ்வில் மீண்டும் நுழைந்து, அவருக்கு ஒரு புது வாழ்வை தந்துள்ளார்.” என்றார்.