September 26, 2016 தண்டோரா குழு
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கோவையில் மாநில தேர்தல்விதி முறைகள் அமலுக்கு வருவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 17,19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.இதில், கோவை மாவட்டத்தில், முதல் கட்டமாக 17.10.16 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை நகராட்சி, 7 பேரூராட்சிகள், 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.இரண்டாம் கட்டமாக 19.10.16 அன்று 3௦ பேரரூராட்சிகளுக்கும், 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறுகையில்,
கோவை மாவட்டத்தில் மொத்தம் 3209 வார்டு உறுப்பினர்கள் பதவிகள் உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பதிவு அலுவலர்களாக முதல் கட்டமாக 12092 அலுவலர்களும் இரண்டாம் கட்டமாக 12009 அலுவலர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர்.
மேலும், கோவை மாவட்டத்தில் மொத்தம் 3650 வாக்குசாவடிகள் அமைக்கப்படவுள்ளது. அதில், மாநகராட்சியில் 144 , நகராட்சியில் 44 ,பேரூராட்சியில் 214, ஊராட்சியில் 282 என மொத்தம் 654 வாக்குசாவடிகள் பதற்றமானவை, இதில் 13 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குசாவடிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பலபடுத்தபடும் எனவும் கண்காணிப்பு கேமரா பொருத்தபட்டு முழு நேரமும் கண்காணிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சியில் 1௦௦வார்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.