• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

70 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கின்றோம் – முக.ஸ்டாலின்

September 1, 2022 தண்டோரா குழு

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் இல்ல திருமண விழாவில் தலைமையேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார்.

இதைத்தொடர்ந்து மணக்களை முதல்வர்கள் அவர்கள் வாழ்த்தி பேசுகையில்;-

மணமக்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்.1972 ம் ஆண்டு பொங்கலூர் பழனிச்சாமி திருமணத்தையும்,
1999 ல் பொங்கலூர் பழனிச்சாமியின் மகன் பைந்தமிழ்பாரி திருமணத்தையும் தலைவர் கலைஞர் நடத்தி வைத்தார்.தலைவர் கலைஞர் இருந்திருந்தால் இந்த திருமணத்தையும் அவர் நடத்தி வைத்திருப்பார். அவருடைய மகனான ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைக்கின்றேன்.

தமிழகத்தில் திமுக ஆட்சி 6 வது முறையாக பொறுப்பேற்று செயல்பட்டு வருகின்றது.
தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் அத்தனையும் நிறைவேற்றியுள்ளோம் என கூறவில்லை.70 சதவீதம் நிறைவேற்றி இருக்கின்றோம்.மீதமுள்ள 30 சதவீதத்தையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதை மக்கள் எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.4 நாட்களுக்கு முன்பு கோவை வந்த போது மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.

மனுக்களை கொடுக்கும் போது கூட மகிழ்ச்சியோடு, பூரிப்பொடு, நம்பிக்கையோடு கொடுக்கின்றனர். இது தான் திராவிட மாடல் ஆட்சி. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்த போது மனுக்களை பெற்றுக்கொண்டோம். ஆட்சிக்கு வந்த 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதியளித்தோம். இதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அப்படி பெறப்பட்ட மனுக்களில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக தனியாக கன்ட்ரோல் ரூம் வைத்து செயல்படுத்துகின்றோம். 15 நாட்களுக்கு ஒரு முறை அங்கு ஆய்வு செய்து வருகின்றேன்.கடந்த முறை டெலிபோன் மூலம் மனு கொடுத்து, மனு மீது நடவடிக்கை முடிந்தவரிடம் பேசினேன்.10 வருடங்களாக நடக்காத வேலை 10 நாட்களில் முடிந்து விட்டதாக பயன் அடைந்தவர் பூரிப்போடு சொல்கின்றனர்.எந்த பாகுபாடும் இன்றி 234 தொகுதி எம.எல்.ஏ களும் பிரச்சினைகள் குறித்த தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அது எடப்பாடி தொகுதியாக இருந்தாலும் பிரச்சினை தீர்க்கப்படும்.ஜெ மறைவில் மர்ம்ம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் சொன்னார்.

ஒப்புக்காக ஒரு கமிஷன் அமைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.திமுக ஆட்சி அமைத்தால் முறையாக விசாரித்து அறிக்கை பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தோம்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை கொடுக்கப்பட்டது. அதில் பல பிரச்சினைகள் இருக்கிறது் அதை இப்போது சொல்ல மாட்டேன். சட்டமன்றத்தில் வைத்து அதில் இருக்கும் பிரசசினைகள் குறித்து விவாதித்து அதை நிறைவேற்றுவோம்.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பான அறிக்கையும் வந்திருக்கின்றது. அதையும் சட்டமன்றத்தில் வைக்க இருக்கின்றோம். சட்டமன்றத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்.உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என எடப்பாடி பழனிச்சாமி சொல்கின்றார்.பெண்களுக்கு இலவச பேருந்து ,பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் டெல்லி முதல்வர் தலைமையில் துவங்கப்பட இருக்கின்றது.பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை விரைவில் வழங்கப்படும். நிதி நிலைமை சரியானவுடன் வழங்கப்படும். கலைஞரின் மகன் . சொன்னதை செய்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் படிக்க