December 17, 2016
தண்டோரா குழு
வியட்நாம் நாட்டில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர், 4 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து அந்நாட்டின் மீட்புக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தாவது:
வியட்நாம் நாட்டில் பெய்துவரும் கன மழையால் பின்ங் தின்க் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் 6 பேர் உயிரிழந்தனர். அதேபோன்று கான்ஹ் மற்றும் துவா தியன் ஹியூ மாகாணங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் காணாமல் போன 4 பேரை தேடும் பணி நடந்துக்கொண்டு வருகிறது.
இந்த வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைத்துள்ளது, ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டன. பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் என்றார்.
இந்த கனமழை சனிக்கிழமை வரை தொடரும் என்றும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு வானிலை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த அக்டோபர் மாதம் முதல் மூன்று முறை வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 6௦பதுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.