July 31, 2017
தண்டோரா குழு
மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை அண்மையில் பிறப்பித்திருந்தது.
இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் தமிழக மாணவர்கள் கல்வியில் பின்தங்காத வகையில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.