September 19, 2017 தண்டோரா குழு
90 பள்ளி மாணவிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய வழக்கில் தலைமையாசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை புதூர் லூர்து நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி இவர் 2011ல் மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த போது 90 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்த்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரனை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதல்படி 2017 ஜனவரி மாதம் முதல் இந்த வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு இன்று மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு பிரிவு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி 24 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 55 வருட சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ரூ 3 லட்சத்து 40 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
அதனைதொடர்ந்து குற்றவாளியை போலீசார் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு கொண்டு செல்லும் போது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் , பொதுமக்கள் அவர் மீது முட்டை வீசி செருப்பு அடி கொடுத்தனர். இதனால் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.