October 13, 2016
தண்டோரா குழு
புதுடில்லியை சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் இறந்து போன தன் மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
டெல்லியில் அருகே கால்காஜி என்னும் பகுதியில் கோவிந்த்ராம் என்பவர் அவருடைய மனைவி கோபியுடன் வசித்து வந்தார்.சில நாட்களுக்கு பிறகு அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்ததையும்,அவ்வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை கண்ட அருகில் வசிப்பவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் உடனே அங்கு வந்து பார்த்தபோது, ராம் படுக்கையில் இருந்ததையும் அவருடைய மனைவியின் மரித்த உடல் அழுகிய நிலையில் கீழே இருந்ததையும் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், அந்த வீடு சரியாக பராமரிக்கப்படாத நிலையில் இருந்துள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், தன் இறந்த மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய மனைவியின் இறப்பில் சந்தேகம் ஏதும் இல்லை என்றும்,அவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்பது பிரேத பரிசோதனையின் முடிவில் தான் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.