April 1, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத் தாக்குதல் சம்பவத்தின் போது எடுக்கபட்ட இதுவரை வெளிவராத புகைப்படங்களை எப்.பி.ஐ வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த 9/112001ம் ஆண்டு அல்கய்தா அமைப்பினர் சிறிய ரக விமானத்தை உலக வர்த்தக மையம் இயங்கி வந்த இரட்டை கோபுரங்கள் மீது மோதச் செய்து தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 3000 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தான் பயங்கரவாதத்தின் மீதான அமெரிக்க பார்வையையும் நடவடிக்கையையும் மேலும் கடுமை யாக்கியது.
இதனால் அமெரிக்க எடுக்க நடவடிக்கையால் அல் கய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லேடன் 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐயின் ஆன்லைன் ஆர்கைவ்ஸில் நேற்று இரட்டை கோபுரத் தாக்குதல் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட இதுவரை வெளிவராத புகைப்படங்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து பென்டகன் கட்டடம் மீதுநடத்தப்பட்ட தாக்குதலின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.