• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீராம் கேப்பிடல் லிட், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிட் மற்றும் ஸ்ரீராம் டிரான்ஸ்ஃபோர்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிட் ஒன்றிணைவதாக அறிவிப்பு

December 15, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் மிகப் பெரிய வாகன கடன் வழங்கும் நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்ஃபோர்ட் ஃபைனான்ஸ் லிட், வங்கி சேவை கிடைக்காத பிரிவில் பல்வகைப்பட்ட சேவைகளை வழங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிட் மற்றும் அதன் புரமோட்டர் நிறுவனமான ஸ்ரீராம் கேப்பிட்டல் லிட் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் குழு கூட்டம் நடந்த 13 டிசம்பர் 2021 அன்று, நிறுவனங்களை இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவித்தன.

இந்த இணைப்பு முறையே பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது, அதே போல ஆர்பிஐஇ சிசிஐ, ஐஆர்டிஎ, என்எச்பி மற்றும் என்சிஎல்டி ஆகியவற்றின் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மற்றும் தேவைப்படும் பிற ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கும் உட்பட்டதாகும்.
இணைப்புக்கு ஏற்ப,ஸ்ரீராம் டிரான்ஸ்ஃபோர் வெளியிடும் பங்குகளின் விபரம் -SCUF -ன் ஒவ்வொரு 1 பங்கிற்கும் 1.55 பங்குகள்
– SCL -ன் ஒவ்வொரு 1 பங்கிற்கும் 0.09783305 பங்கு. இது SCL பங்குதாரர்கள் STFC -ல் SCL வைத்திருக்கும் ஒவ்வொரு 1 பங்கிற்கும் STFC -ன் 1 பங்கைப் பெறுகிறது.மேலும் பங்குதாரர்கள் SCL -ல் வைத்திருக்கும் SCL -ன் ஒவ்வொரு 1 பங்கிற்கும் 1.55 STFC பங்குகளைப் பெறுவார்கள்.செயல்பாட்டு யுக்தி அடிப்படையில் இணைப்புக்கான காரணம்.

வணிக வாகனங்கள், இரு சக்கர வாகனக் கடன்கள், தங்கக் கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் மற்றும் சிறு நிறுவன நிதி ஆகிய அனைத்து கடன்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர இந்த இணைப்பு உதவும். அதன் மூலம் ஒரு நிதி அதிகார மையத்தை உருவாக்கி அது செயல்படும் அனைத்து தயாரிப்பு மற்றும் நுகர்வோர் பிரிவுகளிலும் சந்தைத் தலைமையை அடைய முடியும்.

SCUF மற்றும் STFC ஆகியவை தங்கள் நுகர்வோர் சலுகைகளை வலுப்படுத்தவும், அனைத்து கடன் வழங்கும் தயாரிப்புகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான தயாரிப்புக்கான தொகுப்பை வழங்குவதற்கான ஒரு மகத்தான வாய்ப்பாக இந்த இணைப்பைப் பார்க்கின்றன. காப்பீடு, தரகு மற்றும் AMC வணிகங்கள் மற்றும் அதன் வைப்பு தொகை முதலீட்டாளர்கள் உட்பட, நவீன தொழில்நுட்பத் தளத்தின் ஆதரவுடன் ஒரு விரிவான ஒருங்கிணைந்த-விற்பனைத் திட்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். SCUF நிறுவனம் தனது மேலாண்மையின் கீழுள்ள ரூ.35000 கோடி சொத்து மற்றும் அதன் 950-க்கும் அதிகமான கிளைகளை கொண்ட விநியோக வலையமைப்பை பொறாமைப்படும் அளவுக்கு மிகச் சிறிய தொகுப்பை உள்ளடக்கிய ஒரு நிறுவனமாக மாறுகிறது. STFC உடனான இணைப்பிற்குப் பிறகு, இணைக்கப்பட்ட நிறுவனம் ரூ. 1,50,000 கோடிக்கும் அதிகமான மேலாண்மையின் கீழ் உள்ள சொத்துக்களைக் கொண்டிருக்கும், 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இன்று வரை சேவை பெற்றிருக்கிறார்கள் மற்றும் 3500-க்கும் அதிகமான விநியோக வலையமைப்பை கொண்டிருக்கும்.

இவை அனைத்தும் 50,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட குழுவால் சேவை வழங்கப்படும். இணைப்பிற்குப் பிறகு, 3500-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் STFC மற்றும் SCUF நிறுவனத்தின் விற்பனை மையங்களின் பரவலான வலையமைப்பின் மூலம் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளையும் SCUF மற்றும் STFC -ன் அனைத்து வாடிக்கையாளர்களும் பெற முடியும். SCUF மற்றும் STFC -ல் உள்ள ஒரே மாதிரியான தொழில்நுட்பக் கட்டமைப்பு, இரண்டு நிறுவனங்களின் கிளைகளும் மிகக் குறுகிய காலத்தில் ஒன்றுக்கொன்று வர்த்தகம் செய்யக்கூடியதாக இருப்பதை உறுதி செய்யும். தரவு பகுப்பாய்வு மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்வதற்கு குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவம் அளிப்பதால், இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பின் மூலமாக 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நிதி தேவையை பூர்த்தி செய்ய வழிவகுக்கும். வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க செய்யும் அதை வேளையில், தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் ஒருங்கிணைந்த விற்பனை மூலம் பங்குதாரர்களின் மதிப்பை உயர்த்தவும் வழிவகுக்கும். இவையனைத்தும் 50,000-க்கும் அதிகமான பணியாளர்களின் வலுவான கட்டமைப்பின் மூலம் சேவைகளாக வழங்கப்படும்.

இந்த வலுவான மற்றும் மிகப் பெரிய வாடிக்கையாளர் சேவை அமைப்புடன், நிறுவனத்தின் புதுமையான வேகத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றத்தையும் ஏற்படுத்தும். சில்லறை & SME வாடிக்கையாளர்களின் ஒரு பெரிய உலகுக்கு வழங்கும் புதிய தயாரிப்புகளுடன் அதன் தயாரிப்பு தொகுப்பை ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மேம்படுத்தும். குழுமம் முழுவதும் தொழில் நுட்பத்தில் எப்போதும் கவனம் செலுத்துகிறது. மேலும் இந்த இணைப்பு, தொழில் நுட்பத்தை ஒரே குடையின் கீழ் கொண்டு வர உதவும். இது எங்களது வாடிக்கையாளர்களுக்கு தரவு மற்றும் பகுப்பாய்வு மற்றும் சேவை ஆகியவற்றை சிறப்பாக வழங்கவும் உதவும். ஒரு குறிப்பிடத்தக்க வாடிக்கையாளர் அடித்தளத்துடன்,
செக்-இன்-யூஸ் பயன்பாட்டு நோக்கத்துக்காக டிஜிட்டல் கடன் வழங்கும் தயாரிப்புகளை உருவாக்குவதை நோக்கிய மாற்றத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒரே குடையின் கீழ் தற்போதுள்ள மற்றும் புதிய கடன் வழங்கும் வகையில் சூப்பர் ஆப்-ஐ விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்ரீராம் குழுமத்தின் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் ஒரே கிளிக்கில் அணுகவும், தடையற்ற வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை பெறவும் உதவும். இதன் மூலம் கூடுதல் புரிதல் மற்றும் பகுப்பாய்வை பெறுவதன் வாயிலாக, எதிர்காலத்துக்கான அதன் புதுமையான பாதையில் தொடர விரும்புகிறது.

இந்த இணைப்பு குறித்து ஸ்ரீராம் கேப்பிட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டிவி ரவி கூறுகையில்,

“எந்த வித மூலதன செலவீனத்தையும் அதிகரிக்காமல், இந்த இணைப்பு அனைத்து வணிகத் துறைகளிலும் எங்கள் விநியோக செயல்பாடுகளை மேம்படுத்தும். ஒருங்கிணைப்பால் ஏற்படும் நன்மைகள் மற்றும் டிஜிட்டல் முன்முயற்சியால் ஏற்படும் பலன்கள் மகத்தானவையாக இருக்கும். இந்த இணைப்பு பல்வேறு அடுக்குகளையும் குறைத்து எங்களது கட்டமைப்பை எளிதானதாக மாற்றும்” என்றார்.

பிஇஎல் நிறுவனத்தின் தலைவர் அஜய் பிரமல் இந்த இணைப்பு குறித்து மேலும் கூறுகையில்,

“ஸ்ரீராமின் இரண்டு கடன் நிறுவனங்களும் ஒன்றாக இணைவதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவை மிகப் பெரிய சில்லறை நிதி நிறுவனமான என்பிஎப்சி ஆக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், ஒருங்கிணைந்த ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் மகத்தான வாய்ப்புகளையும் அவர்களுக்கு அது வழங்குகிறது. ஒருங்கிணைந்த வகையில் 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மதிப்பை உருவாக்குவதால், குழுமத்துக்கு இது ஒரு மகத்தான பயணமாக அமையும்” என்றார்.

ஸ்ரீராம் டிரான்ஸ்ஃபோர்ட் ஃபைனான்ஸ் லிட். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிர்வாக இயக்குநர் உமேஷ் ரேவங்கர் கூறுகையில்,

“இந்த இணைப்பு மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் ஊழியர்கள் மற்றும் வணிக பங்குதாரர்களுக்கும் உருவாக்கும் தனித்துவமான வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சந்தேகத்துக்கு இடமின்றி ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் இந்தியாவின் கிராமப்புறங்களில் நிதி சேவைகளுக்கான சந்தை தலைமையாக நிச்சயம் திகழும்”

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிட். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ஒய்.எஸ்.சக்கரவர்த்தி குழுமம் அதன் வணிக மாதிரியில் நிச்சயம் உறுதியாக இருக்கும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.மேலும் அவர் கூறுகையில், “ஸ்ரீராம் குழுமம் எங்களின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளை எப்போதும் கடன் கிடைக்காமல் தவித்து வரும் வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஒரே குடையின் கீழ் தீர்வுகளை எளிதாக்குவதற்கும் வழங்குவதற்கும் இந்த இணைப்பு மற்றொரு படியாக விளங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். என்பிஎப்சி துறையில் முதன்மையாக விளங்குவது என்பது மிகப் பெரிய பொறுப்பை கொண்டு வருகிறது. மேலும் அதை நாங்கள் சிறப்பாக செய்வோம் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

நிர்வாக குழு
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் உள்ள தலைமைக் குழு, இரு நிறுவனங்களிலும் உள்ள அபரிமிதமான திறமைகளைக் கையாளும்.
STFC நிறுவனத்தின் சிஇஓ மற்றும் துணை செயல் தலைவர் உமேஷ் ரேவங்கர், ஒருங்கிணைந்த நிறுவனத்தின் துணைத் தலைவராக இருப்பார். ஸ்ரீராம் சிட்டி நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் ஒய்.எஸ். சக்ரவர்த்தி, ஒருங்கிணைந்த நிறுவனத்தின் சிஇஓ மற்றும் எம்டியாக இருப்பார்.

SCUF குழுவில் உமேஷ் ரேவாங்கரையும், STFC இயக்குநர்கள் குழுவில் ஒய் எஸ் சக்ரவர்த்தியையும் நியமிக்க அந்தந்த நிர்வாக குழுக்கள் இன்று ஒப்புதல் அளித்துள்ளன.
STFC -யின் குழுவும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் ஷர்மாவை குழுவில் முழு நேர இயக்குநராக நியமிக்க ஒப்புதல் அளித்தது.

மேலும் படிக்க