January 12, 2022 தண்டோரா குழு
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் நாட்டில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களில் மிகவும் நம்பகமான நிறுவனமாகும். இந்த நிறுவனம் தி ஃபைனான்சியல் இம்யூனிட்டி சர்வே 2.0 என்ற மற்றொரு விரிவான நுகர்வோர் ஆய்வை வெளியிட்டது.
அதில் கோவிட் தொற்றுக்கு பிந்தைய உலகில் நிதி தயார்நிலை நோக்கிய நுகர்வோரின் மாறிவரும் நடத்தைகள் குறித்த ஆழமான முடிவுகளை கண்டடைந்தது. இந்த சர்வேக்காக நீல்சன் ஐக்யூ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முழுவதையும் அடக்கும் வகையில் 28 நகரங்களில் வசிக்கும் 5 ஆயிரம் பேரிடம் தகவல்களை திரட்டியது.
ஒட்டுமொத்தமாக பதிலளித்தவர்கள், அதாவது 5 ஆயிரம் பேரை நேரில் சந்தித்து நீல்சன் ஐக்யூ நிறுவனத்துடன் இணைந்து எஸ்பிஐ லைஃப் சர்வே மேற்கொண்டது.பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தியாகளில் பெரும்பான்மையினர் நாட்டில் 3-வது அலை பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக உறுதியாக நம்புகின்றனர்.80 சதம் சதவீதம் இந்தியர்கள் ஒற்றை அல்லது இரட்டை தடுப்பூசியை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ரீதியாக நோய் எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று உறுதியாக உணர்வதன் வாயிலாக இந்த சூழ்நிலையை கடந்து விட முடியும் என அவர்கள் நம்புவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் 38 சதம் இந்தியர்கள் அடுத்த 3 மாதங்களில் நிலைமை இன்னும் மோசமடையும் என்று உணர்கின்றனர்.
மேலும் அவர்களின் முதன்மையான 3 கவலைகளாக
(1) மருந்து மற்றும் சிகிச்சை செலவு அதிகரிப்பு
(2) நிலையற்ற வேலை
(3) தங்களது மற்றும் குடும்பத்தினரது உடல்நலம் ஆகியன பிரதானமாக உள்ளன.
பெருந்தொற்று காரணமாக வருமானத்தில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக மேற்கூறிய கவலைகளை குறித்த நுகர்வோரின் நடத்தைகளை மறுவரையறை செய்வது தொடர்பாக இந்த சர்வே மேலும் முயற்சி மேற்கொண்டது. அதில் 79 சதம் பேர் வருமான சரிவை எதிர் கொண்டனர் அதில் 3-ல் 1 பங்கினர் குறைக்கப்பட்ட வருவாயை எதிர்கொள்ள நேர்ந்தது தெரியவந்தது. 64 சதம் இந்தியர்கள் வாழ்வின் முக்கியமான கட்டங்களாக கருதும் சேர்த்து வைத்த சேமிப்பு, ஓய்வு கால பயணம், குழந்தைகளின் கல்வி செலவு ஆகியவற்றின் மீது பாதிப்பை ஏற்படுத்தியதாக உணர்கின்றனர்.
கோவிட் 19 மற்றும் நிலையற்ற சூழல் காரணமாக செலவுகளை சமாளிப்பது மிகவும் முக்கியமான அம்சமாக மாறியுள்ளது. மேலும் 57 சதம் இந்தியர்கள் தங்களது மற்றும் தங்களது குடும்பத்தினரின் நிதி பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை கையாள முடிவதாக நினைப்பதும் இதனோடு தொடர்புடையதாக கருதுகின்றனர்.ஒட்டுமொத்த நிதி திட்டமிட்டலில் காப்பீடு என்பது மிகவும் அதி அத்தியாவசியமானது என 78 சதம் இந்தியர்கள் உணர்கின்றனர்.
இவ்வாறாக காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 46 சதம் பேர் சுகாதார காப்பீட்டையும், 44 சதம் பேர் ஆயுள் காப்பீட்டையும் கோவிட் 19-க்கு பிறகு முதன்முறையாக வாங்கியுள்ளனர். காப்பீடு மிகவும் முக்கியமானது என இந்தியர்கள் உணர்ந்த போதிலும் ஆண்டு வருமானத்தை விட 3.8 மடங்கு மட்டுமே காப்பீட்டுக்காக ஒதுக்கியுள்ளனர், பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட 10 மடங்கு முதல் 25 மடங்கு வரையிலான நிலையை அவர்கள் நெருங்கக் கூட இல்லை.
இது குறித்து எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 2 ஆவது மண்டல தலைவர் ஏவிஎஸ் சிவ ராம கிருஷ்ணா கூறுகையில்,
“பெருந்தொற்று நமது வாழ்வில் பல்வேறு வழிகளிலும் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சவால்களை எதிர்கொள்தல் மற்றும் அதை கையாள்தல் போன்ற பல்வேறு காரணிகள் நுகர்வோர் மத்தியில் புதிய பழக்கங்கள் உருவாக வழிவகுத்தன. பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகில் இந்த மாறி வரும் நடத்தைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் காரணமாக நிதி திட்டமிடல் குறித்து முடிவு எடுக்கும் அவர்களின் தன்மையிலும் உறுதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எஸ்பிஐ லைஃப் நடத்திய ஃபைனான்சியல் இம்யூனிட்டி சர்வே 2.0 மூலமாக, நுகர்வோரிடம் என்ன விதமான மாற்றங்களை அது ஏற்படுத்தியுள்ளது என்பதில், குறிப்பாக கோவிட் தொற்றுக்கு பிந்தைய உலகில், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செலவுகளை சமாளிக்கும் ஆற்றல் தொடர்பான நுகர்வோரின் மாறியுள்ள நடத்தைகளை குறித்து புரிந்து கொள்ள உதவுகிறது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இனி வரும் ஆண்டுகளில், நிதி திட்டமிடலில் நுகர்வோர் நிச்சயமாக காப்பீட்டை தேர்வு செய்வார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். இந்தியர்கள் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் செலவுகளை சமாளிக்கும் வலுவான ஆற்றலை பெறுவதற்கான உந்துதலை முன்பை காட்டிலும் அதிகமாக பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.நிதி தயாரிப்புகள் நோக்கி நுகர்வோரிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஒரு சிறந்த அறிகுறிஇ மேலும் எதிர்காலத்தில் யூகிக்க முடியாத சூழல் வரும் போது அதை எளிதாக கையாள்வதற்கும் இது உதவியாக இருக்கும்” என்றார்.