• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை நேரு கல்விக்குழுமம் சார்பில் “ஸ்ரீ பிகே தாஸ் நினைவு சிறந்த ஆசிரியர் விருது 2022” வழங்கும் விழா

February 27, 2022 தண்டோரா குழு

கோவை மற்றும் கேரளாவில் புகழ்பெற்ற நேரு கல்வி குழுமம் ஆண்டு தோறும் சிறந்த பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு “சிறந்த ஆசிரியர் விருது” வழங்கி வருகின்றது.
இந்த வருடத்திற்கான சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள திருமலையம்பாளையம் நேரு கார்டன் வளாகத்தில் உள்ள பிகே தாஸ் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் பி கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தார். நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர் பி கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவிற்கு முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் முதன்மை கல்வி அதிகாரி என். கீதா கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து பேசியதாவது,

இது ஒரு சிறந்த நாள் ஆகும், இன்று விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். மாணவர்கள் அனைவரும் கோவிட்-19 பெரும் தொற்றுக்கு பிறகு மாணவர்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை கையாள்வதில் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.அவர்களை ஊக்கப்படுத்தி நல்ல கற்பித்தலையும் பன்புகளையும் அளிப்பது ஆசிரியர்களின் கடமையாகும்.மாணவர்களின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அவர்களை கையாள்வது மிகவும் சிரமமாக இருந்தது.மாணவர்களை அவர்களின் மொழி மற்றும் மனநிலைக்கு தகுந்தாற்போல் அவர்களை கையாளவேண்டும். மாணவர்களின் மனநிலையையும், அவர்களின் தாய் மொழியையும் புரிந்துகொண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிப்பது மிகுந்த பயனைத் தரும்.

நான் இந்த விழாவில் கலந்து கொள்வது ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான். நம்மை உற்சாகப்படுத்தும் போது தான் நமக்கு இன்னும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மாணவர்களை கையாளும் விதத்தில் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகின்றார்கள். அவர்களுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் நல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு நம்மிடம் உள்ள அறிவு, மனிதப்பண்பு, கலாச்சாரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுத்தர வேண்டியது நமது பொறுப்பு.

மாணவர்களை தட்டிக்கொடுத்து நல்ல முறையில் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். மாணவர்கள் 12 வகுப்பு முடிந்ததும் அவர்கள் நல்ல பழக்கத்திற்கு வந்து விடுவார்கள் அதுவரை சிறிது சிரமமாகத்தான் இருக்கும். இந்த கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கும் போது தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து என்னற்ற ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இந்த விருதுக்கு வந்திருந்தன, அதில் எங்கள் விருது வழங்கும் குழுவினர் நேரடியாக விசாரித்து தகுதியானவர்களை தேர்வு செய்தனர்.

மேலும் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி செண்பகம் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் தாளாளர் ஜோசப் ஆன்சன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.விழாவில் தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், தஞ்சாவூர், சேலம், நாமக்கல், உடுமலைப்பேட்டை,திருப்பத்தூர், தக்கலை, குலசேகரம், கோவில்பட்டி, கன்யாகுமாரி, மதுரை, கரூர், பொள்ளாச்சி என தமிழகத்தை சேர்ந்த 64 ஆசிரியர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த 10 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 74 பள்ளி ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மேலும் விழாவில் சிறந்த தலைமையாசிரியருக்கான விருது கோவை, ஈச்சனாரியில் உள்ள கேபிஎம் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளி முதல்வர் திரு ஏ கருணாநிதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை கோயம்புத்தூர், மதுக்கரை உள்ள ஸ்ரீ பி மல்லையன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் டாக்டர் ரேகா மணிகண்டன் அவர்களுக்கும், பாலக்காடு, செயின்ட் ரஃபேல் கதீட்ரல் பள்ளி, முதல்வர், திருத்தந்தை, டாக்டர் சனில் ஜோஸ் மற்றும் கென்னடி மேல்நிலைப்பள்ளி, முதல்வர், பாபு மேத்யூ ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி அனிருதன் வரவேற்றார். முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இரா மாலதி நன்றி கூறினார். விழாவில் நேரு கல்வி குழுமங்களின் அதிகாரிகள், முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க