• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குழந்தைகளுக்கு பெயர் சூட்டி கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிய 16 வயது சிறுமி

September 22, 2016 தண்டோரா குழு

ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் குழந்தைகளுக்கு பெயர்களை சூட்டுவதன் மூலம் இதுவரை சுமார் 4 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள க்லோசெச்டேர்ஷையர் நகரில் வசிக்கும் போ ஜெச்சப் என்னும் 16 வயது நிரம்பிய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது பெற்றோருடன் சீனாவுக்கு அவர் சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது, சீனா நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைக்கு ஒரு அழகிய ஆங்கில பெயர் ஒன்றை சூட்டுமாறு அச்சிறுமியை கேட்டுக்கொண்டுள்ளார்.அவர்கள் விருப்பத்திற்கு இணைங்கி அந்த சிறுமியும் அக்குழந்தைக்கு ஒரு பெயரை சூட்டியது. அக்குழந்தையின் தாய் அவருக்கு சிறிய அளவிலான தொகையை அன்பளிப்பாக தந்துள்ளார்.

அத்தொகையை பெற்ற அந்த சிறுமிக்கு வருமானம் ஈட்டுவதற்கு இப்படி செய்வது ஒரு வழி என்று உணர்ந்த சிறுமி இங்கிலாந்து திரும்பியதும் ஒரு புதிய இணையத்தளத்தை தொடங்கியுள்ளார்.

பின்னர், “இந்த இணையத்தளத்தில் சீனாவை சேர்ந்த குழந்தைகளுக்கு ஆங்கில பெயர் சூட்டப்படும்” என விளம்பரம் அளித்துள்ளார்.

மேலும், சீனா குடிமக்களில் பலருக்கும் தங்களது குழந்தைகளுக்கு அழகிய ஆங்கில பெயர்களை சூட்டுவதில் ஆர்வம் அதிகம். ஏனெனில், ஆங்கில பெயர்களை சூட்டுவதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் இங்கிலாந்தில் கல்வி பயில எளிமையாக இருக்கும் என சீனா மக்கள் கருதுகின்றனர்.

அதைபோல் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்போது அக்குழந்தையின் 12 ஆளுமை பண்புகளில் 5 குணாதிசயங்களை தேர்வு செய்து அவற்றின் அடிப்படையில் ஆங்கில பெயரை சூட்ட வேண்டும்.
இதே வழிமுறையை தான் இந்த 16 வயது சிறுமியும் செய்து வருகிறார்.

குழந்தையின் குணாதிசயங்களுக்கு ஏற்ப 3 பெயர்களை தேர்வு செய்து பெற்றோருக்கு அனுப்பி வைப்பார். இந்த 3 பெயர்களில் அவர்கள் இறுதியாக ஒரு பெயரை தேர்வு செய்து தங்களது குழந்தைக்கு சூட்டுவார்கள். இதன் மூலம் அச்சிறுமிக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.

இதுவரை சிறுமி சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளார். இதன் மூலம் 48,000 பவுண்ட்,அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4.17 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளார்.

சீனாவில் பல இணையத்தளங்கள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் இணையதளம் மூலம் விரும்பும் ஆங்கில பெயர்களை சூட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க