August 16, 2016 தண்டோரா குழு
சீன தேசத்தை சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர், சக நாட்டு நீச்சல் வீராங்கனையிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியின் போது கேட்ட சம்பவம் அங்கு கலகலப்பை ஏற்படுத்தியது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டு தவிர வேறு சில களேபரங்களும் அரங்கேறிக் கலகலப்பை ஏற்படுத்தி வருகின்றன.சமீபத்தில் பிரேசிலை சேர்ந்த ஒரு ஓரினச்சேர்க்கை ஜோடி தங்களது காதலை மைதானத்தில் வைத்து வெளிப்படையாக வெளிப்படுத்தியது.
இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த நீச்சல் ஜோடி ஒன்று தங்களது காதலைப் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் வெளிப்படுத்திக் கலப்பாக்கியுள்ளது.சீனாவைச் சேர்ந்த நீச்சல் (டைவிங்) வீராங்கனை ஹீ ஷீ. இவர் ஒலிம்பிக் போட்டியில் டைவிங் பிரிவில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
போட்டி முடிந்ததும் பதக்கம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.பதக்கங்களை வீராங்கனைகள் பெற்றுக்கொண்டனர்.அப்போது ஹீயை நோக்கி அவரது கதாலர் குவின் காய் ஓடி வந்தார்.அவரும் ஒரு நீச்சல் வீரர்தான்.
ஹீ முன்பு ஒரு காலால் முழங்காலிட்டு தனது காதலைச் சொல்லி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கோரினார்.அதைப் பார்த்ததும் ஹீயின் முகம் அப்படியே சிவந்து போனது.சிரித்த படி குவின்காயின் காதலையும், கல்யாணக் கோரிக்கையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
தற்போது நடைபெற்று வரும் போட்டியில் குவின்காய் வெண்கலப் பதக்கம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காதல் ஜோடியின் காதல் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒலிம்பிக் விழாவை மேலும் கலகலப்பாக்கிவிட்டது.
இது குறித்து ஹீ கூறுகையில், மதியான வேளையில் இருந்தே இவர் ஒரு மாதிரியாகத் தான் இருந்தார்.சிரித்தார், பாட்டுப் பாடினார்.என்ன என்று கேட்டதற்கு பதிலே சொல்லவில்லை.இப்போது தான் எல்லாம் புரிந்தது என்று கூறிச் சிரித்தார் ஹீ.
குவின்காய்க்கு 30 வயதாகிறது, ஹீக்கு 25 வயதாகிறது.கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகின்றோம் என்றும், ஒலிம்பிக்கில் வைத்து தனது கல்யாண திட்டத்தை சொல்ல முடிவு செய்திருந்ததாகவும் குவின்காய் தெரிவித்தார்.