September 22, 2016
தண்டோரா குழு
டெல்லியில் உள்ள பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனையின் பாதுகாவலர்களை தாக்கிய வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 9 ம் தேதி எய்ம்ஸ் மருத்துவ வளாகத்திற்குள் சோம்நாத் பாரதியும் அவரது ஆதரவாளர்களும் நுழைந்தனர். நிர்வாகத்தின் அனுமதியின்றி எய்ம்ஸ் வளாகத்தின் பாதுகாப்பு வேலி மற்றும் சுற்று சுவரை ஜெ.சி.பி., எந்திரத்தை கொண்டு சேதப்படுத்தினர். இதை தடுக்க சென்ற பாதுகாப்பு அதிகாரிகளை அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். மேலும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 பாதுகாவலர்களிடம் தவறாக நடந்துகொண்டு தாக்கியதாகவும் புகார் எழுந்தது.
இந்தநிலையில், இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் பேரில், ஹோஸ் காஸ் காவல் நிலையத்தில் சோம்நாத் பார்தி மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் இன்று சோம்நாத் பார்தி கைது செய்யப்பட்டுள்ளார்.