• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நடிகர் சூரியின் பேஷ்புக் பக்கத்தில் பேய் வீடியோ, உண்மையா பரபரப்பா

August 20, 2016 தண்டோரா குழு

கடந்த இரு தினங்களுக்கு முன் நடிகர் சூரியின் முகநூல் (பேஷ்புக்) பக்கத்தில் காரில் செல்லும்போது பேயைப் பார்த்ததாக ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.அது உண்மையா அல்லது பரபரப்பா என தற்போது விவாதம் தொடங்கியுள்ளது.

நடிகர் சூரி கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் கோவையில் இருந்து பழனி செல்லும் நெடுஞ்சாலையில் காரில் வேகமாகச் சென்று கொண்டிருந்த போது, சாலையில் நடுவில் யாரோ ஒருவர் நிற்பதைப் போன்ற ஒரு உருவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, தனது ஓட்டுனரிடம் காரின் விளக்குகளை அனைத்து விட்டு காரை அந்த உருவத்தின் மீது மோதுமாறு கூறுவது போலவும்,அதைக் கேட்ட ஓட்டுனர் உடனடியாக அந்த உருவத்தின் மேல் மோதிவிட்டு செல்வது போல ஒரு வீடியோ அவரது முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.

ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சி நடிகர் சூரியின் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் தற்போது இந்த வீடியோ ஏதாவது ஒரு படத்தில் வரும் காட்சியா அல்லது உண்மையா என வலைத்தளங்களில் விவாதம் துவங்கியுள்ளது.

ஏனெனில்,அது பேயாக இருந்தால் சத்தம் கேட்க வாய்ப்பில்லை, அப்படி சத்தம் கேட்டால் கட்டாயம் அது மனிதனாக இருக்க வாய்ப்புள்ளது.அவ்வாறு இடிக்கப்பட்டது ஒரு மனிதன் என்றால் அது கொலைக்குற்றத்திற்கு சமமானது.

அதுவும், சூரி மோது மோது என்று ஓட்டுனரிடம் சொல்வது கொலை செய்யத்தூண்டுவதற்கு சமம். இதற்கு மிகப்பெரிய தண்டனை உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.அவ்வாறு ஏதாவது ஒரு நிகழ்வு நடந்திருந்தால் இந்நேரம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு சூரியை கைது கூட செய்திருக்கலாம் என ஒருதரப்பினர் கூறிவருகின்றனர்.

அதே சமயம் பேய் கட்டாயம் இருப்பதாகக் கூறும் ஒரு சிலர், இது சாத்தியம் எனவும், அவ்வாறு பேய் மீது மோதும்போது, அதிகப்படியான காத்து காரின் மீது மோதும் இதில் காலில் அடிபடுவது போல தெரியும் எனக் கூறுகின்றனர்.ஆனாலும் அதிகப்படியான வலைத்தளவாசிகள் இது ஏதாவது ஒரு படத்தில் வரும் ஒரு காட்சியாக இருக்கலாம் என்றே கூறுகின்றனர்.ஆனால் இது குறித்து சூரியே விளக்கமளித்தால் தான் உண்மை தெரியவரும்.

மேலும் படிக்க