August 23, 2016
தண்டோரா குழு
தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற சௌந்தரராஜன் கார் முற்றிலும் எறிந்த விபத்தில் உயிர் தப்பியுள்ளார்.
தமிழில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட சுந்தரபாண்டியன்,தர்மதுரை(2016) ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் சௌந்தரராஜன்.இவர் இன்று காலை கோவில்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நண்பர்கள் நான்கு பேருடன் தனது காரில் சென்றுகொண்டிருந்த போது, காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அவரும் அவரது நண்பர்களும் உடனடியாக காரில் இருந்து கீழே குதித்து தப்பியுள்ளனர்.இதையடுத்து தீயை அணைக்க முற்பட்டும் முடியாததால் கார் முழுவதும் சிறிது நேரத்தில் எரிந்து சாம்பலானது.இதில் அதிர்ஷ்ட வசமாக காரின் கதவு திறந்துகொண்டது.
இல்லாவிட்டால் அனைவரும் காரிலேயே மாட்டி உயிரிழக்க நேர்ந்திருக்கும்.இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.இது குறித்து நாலாட்டின்புதூா் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.