June 25, 2016 தண்டோரா குழு
யோகா தினம் ஜூன் 21ம் தேதி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தேதியில் ஒவ்வொரு தலைவரும் அவரவர் மாநிலத்தில் திறம்பட நடத்தினர். ஒவ்வொரு பள்ளியிலும் இந்நிகழ்ச்சியைக் நடத்திக்காட்டி கொண்டாடினர்.
அவ்வண்ணம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையையாவும் யோகா நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினார். மக்கள் பலரும் அதில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
முக்கிய விருந்தாளியாக பாலிவுட் நடிகையான பிபாஷா பாசுவும் முதலமைச்சர் சித்தராமையாவுடன் மேடையில் அமர்ந்து பல ஆசனங்களையும் செய்து விழாவிற்கு மெருகூட்டி வந்தார். இவை அனைத்தும் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது.
நடிகை பிபாஷா பாசு யோகாவில் தேர்ச்சி பெற்றவர். தினமும் பயிற்சி செய்வதோடு மற்ற சகநடிகைகளுக்கும் கற்றுத் தருவது அவரது வழக்கம்.
இந்நிலையில் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்தது கர்னாடக அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அந்த நடிகைக்கு 1.5 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வந்து போவதுக்கு விமானச் செலவு போன்றவற்றை அரசு செலவழித்தென்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் தங்குவதற்கு உயர்ரக தங்கும் விடுதிக்கும் அரசு கணக்கில் இருந்து செலவளிக்கப்பட்டுள்ளது என்றும் பல குற்றச்சாட்டுகளை பிற அமைப்பினர் முன்வைக்கின்றனர்.
அரசு நடத்தும் நிகழ்ச்சிக்கு வரும் ஒரு நபர் அந்நிகழ்ச்சிக்கு பணம் வாங்குவது தவறு. இது போன்ற நிகழ்ச்சிக்கு இத்தகைய நபரைத் தேர்ந்தெடுத்தது அரசின் மிகப் பெரிய தவறு என குற்றம் சுமத்தும் அவர்கள், மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பது மிகப்பெரிய குற்றம் எனவும் தெரிவித்துள்ளனர். இத்தொகையை ஏதேனும் ஒரு ஆக்கப்பூர்வமான செயலுக்குச் செலவழித்திருக்கலாம் என்றும் பலர் விமரிசித்துள்ளனர்.