• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

18 ஆண்டுகளுக்குப் பிறகு வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் விடுதலை

August 16, 2016 தண்டோரா குழு

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சந்தன கடத்தல் வீரப்பனுடைய கூட்டாளிகள் 4 பேரை கர்நாடகா அரசு நேற்று விடுதலை செய்தது.

நமது தேசத்தின் 70வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நன்னடத்தை அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் சிறைச்சாலையில் இருந்து மொத்தம் 348 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

இதில்,வீரப்பனின் கூட்டாளிகளான அன்புராஜ், தங்கராஜ், அப்பர்சாமி, துப்பாக்கி சித்தன் ஆகிய நான்கு பேரும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.சுமார் 18 ஆண்டுகளாக சேலம், கோவை, மைசூரு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விடுதலை செய்யப்பட்ட வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரும் கடந்த 1998ம் ஆண்டு தமிழக காவல் துறை தலைவர் காளிமுத்து முன்பாக சரணடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க