November 23, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் ‘நன்றி நாள்’ கொண்டாட்டம் இன்று(நவ 23) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 23ம் தேதி “ThanksGivingDay” கொண்டாடப்படுகிறது.அமெரிக்காவில் இந்த கொண்டாட்டம், கடந்த 1600ல் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த நாள் அமெரிக்காவின் தேசிய விடுமுறை நாள் ஆகும். இந்நாளில் அமெரிக்காவிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வணிக அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
இந்த கொண்டாட்டம் அமெரிக்க முழுவதும் பல்வேறு சமூகங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டது. ஆனால்,1789ம் ஆண்டு, அமெரிக்காவின் முதல் குடியரசு தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல் தேசிய நன்றி நாளை அறிவித்தார்.
இந்த கொண்டாட்டத்தின் போது வான்கோழி,காய்கறிகள் மற்றும் ஸ்டப்பிங்(stuffing), கருணை கிழங்கு, மற்றும் பம்ப்கின் பை(Pumpkin Pie)ஆகிய உணவு வகைகள் விசேஷமாக தயாரிக்கப்படுவது வழக்கம்.
இந்த கொண்டாடத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ‘நன்றி நாள் அணிவகுப்பு’ (Thanksgiving Parade). அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் இந்த அணிவகுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.