• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆப்பிரிக்காவில் அமோகமாக விற்பனையாகும் தமிழக அம்மா இலவச பள்ளி பைகள்?

September 7, 2016 தண்டோரா குழு

தமிழக அரசால் ஏழை மாணவ,மாணவியருக்கு வழங்கபட்ட விலையில்லா பள்ளி பைகள் ஆப்பிரிக்கா சந்தையில் விற்பனையாகும் படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழக அரசால் வழங்கபடும் விலையில்லா பொருட்கள் அவ்வப்போது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் விற்பனையாகி வருவது வாடிக்கையாகிவிட்டது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் ஒரு சில புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது. அதில், அம்மா இலவச பள்ளி பைகளை ஆப்பிரிக்கர்கள் சுமந்து செல்லும் படங்கள் தான்.

ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா பொருட்கள் அண்டை மாநிலங்களில் விற்கப்படுவதை ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருந்தன.

இந்நிலையில் தற்போது அம்மா பள்ளி பைகள் ஆப்பிரிக்க சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. இந்த இலவச பொருட்கள் ஆப்பிரிக்காவுக்கு போனது எப்படி என்பது தான் புரியாத புதிராக உள்ளது.

மேலும் படிக்க