September 28, 2016 தண்டோரா குழு
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ரயில்வே துறையில் பல நிலையில் பல லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதில் சி மற்றும் டி நிலை ஊழியர்கள் வரும் தீபாவளிக்கு போனஸ் சம்பந்தமாக தங்களது சங்கங்கள் மூலமாக மத்திய அரசாங்கத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தனர்.
இது சம்பந்தமாக மத்திய அரசாங்கம் அமைச்சரவை கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது. இதில் சி மற்றும் டி நிலை ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை போனசாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து எஸ்.ஆ.ர்.எம்.யு சேலம் கோட்ட செயலாளர் கோவிந்தன் கூறுகையில்,
மத்திய அரசாங்கம் இன்று வழங்குவதாக அறிவித்த போனஸ் என்பது சீலிங் போனஸ், அதாவது 18 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு ஊழியருக்கு 7 ஆயிரம் ரூபாய் என்ற மதிப்பில் தான் போனஸ் வழங்கப்படும். ஆனால், நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் சீலிங் இல்லாத போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். எனினும், கடந்த ஆண்டினை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த வருடம் சற்று அதிகமாக போனஸ் வரும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார்.
இந்த போனஸ் மூலம் 12,60,000 ஊழியர்கள் பயனடைவார்கள். இரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக ரூ.2090.96 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது