December 18, 2017 தண்டோரா குழு
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் 42 நாட்களில் கடல் வழியாக உலகை சுற்றிவந்து, உலக சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் காபார்ட்(34).இவர் கடல் வழி மூலம் பயணம் செய்வதில் அதிக விருப்பம் கொண்டவர்.இதனையடுத்து,30 மீட்டர் நீளம் உடைய Maxi-Trimaran என்னும் படகு மூலம் உலகைச் சுற்றி வர தனியே பயணம் செய்தார்.
இந்த படகு மூலம் சுமார் 42 நாட்கள், 40 நிமிடங்கள் மற்றும் 35 வினாடிகள் உலகை சுற்றிவந்து, சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம்,தாமஸ் கோவில்லே படைத்த உலக சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும், அவர் உலகைச் சுற்றி வந்த படகிலிருந்த ஜிபிஎஸ் மற்றும் கருப்பு பெட்டியை சோதனை செய்த பிறகு தான், அவருடைய சாதனையை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று World Sailing Speed Council அதிகாரிகள் தெரிவித்தனர்.