• Download mobile app
16 Sep 2024, MondayEdition - 3141
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிடிவாரன்ட் வாங்கறது எல்லாம் எங்களுக்கு அல்வா மாதிரி

July 26, 2016 தண்டோரா குழு

கடந்தாண்டு நவம்பர் 6ம் தேதி திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தரக்குறைவாகப் பேசினார்.

இதையடுத்து அவர்கள் மீது திருப்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு போடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவர்கள் நேரில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டார்.

அடுத்தடுத்து நான்கு முறை அவர்கள் நேரில் ஆஜராகாததால் இன்று நடைபெற்ற விசாரணையின் பொது அவர்கள் இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

ஆனால் பிடிவாரன்ட் என்பது அவர்கள் இருவருக்கும் ஒன்றும் புதிதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் முதல்வரை அவதூறாகப் பேசியதற்குப் போடப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்ததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

அதே ஆண்டு அதே மாதம் தஞ்சை நீதிமன்றத்திலும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரேமலதா மீது போடப்பட்ட அவதூறு வழக்கில் அவர் ஆஜராகாததையடுத்து அவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து இருவரும் மாறி மாறி பிடிவாரன்ட் வாங்கிவருவது தே.மு.தி.கவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க