• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் மன்னிப்பு ஆயுதத்தை கையிலெடுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்.

July 20, 2016 தண்டோரா குழு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால் இளைஞர்களுக்கான தேர்தல் கொள்கை விளக்க அறிவிப்பில் அவரது கட்சியின் சின்னமான துடைப்பத்துடன், சீக்கியரின் புனிதக் கோயிலின் படத்தையும் ஒரு சேர முதல் பக்கத்தில் சித்தரித்திருந்தார்.

இது சீக்கியர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கும்படி கெஜரிவால் சீக்கியர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஷிஷ் கெடன் இளைஞர்களின் விளக்க அறிக்கை சீக்கியர்களின் புனித நூலான குரு க்ரந்த் சாஹிப் மற்றும் வேறு மதங்களின் புனித நூல்களுக்கும், பகவத்கீதைக்கும் சமம் என்று கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து அமிர்சார் காவல்துறையினரால் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக 295-A பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத்தேர்தல் பிரசாரத்திற்காக இளைஞர்களின் தேர்தல் கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிடுகையில் நேர்ந்த இந்தத் தவறு இருவரையும் சீக்கியர்களின் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

சீக்கியர்களின் உணர்வுகளைப் புண்படுத்த தாங்கள் நினைக்கவில்லை என்றும் இவை அறியாமல் நடந்த தவறுகள்தான் என்றும் இவர்கள் தெரிவித்தனர்.

அதற்குப் பிராயச்சித்தமாக சீக்கியர்களின் புண்ணியத் தலமான பொற்கோயிலில் பக்தர்களுக்கு சேவை செய்வது என்று முடிவெடுத்துள்ளனர்.

கைகளைக் கூப்பியபடி, கைக்குட்டையைத் தலையில் அணிந்து கோயிலை வலம் வந்து இருவரும் தங்கள் பிரார்த்தனையைச் செலுத்தினர். அதன் பிறகு ஒரு நாளைக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் உண்ணுமளவிற்கு உணவு தயாரிக்கப்படும் சமையல் அறையில் உள்ள பாத்திரங்களை சுத்தம் செய்தனர்.

இந்த 45 நிமிட சேவைத் தங்களுக்கு மிகுந்த திருப்தியையும், மனசாந்தியையும் அளித்ததாகத் தெரிவித்தனர். ஷிரொமனி அகாலிதல் மற்றும் பாரதீய ஜனதா ஆகிய கட்சிகளை ஆம் ஆத்மி கட்சி
தலைவர் கேஜரிவாலின் இந்தச் செயலை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தங்கள் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் பொறாமையினால் இக்கட்சிகள் தங்களை இழிவுப் படுத்துகிறது என்று கேஜ்ரிவால் குற்றஞ்சாட்டினார்.

செய்த தவற்றுக்குப் பிராயச் சித்தமாக பக்தர்களுக்குச் சேவை செய்ததுடன் கருவறை சென்று இறைவனின் பக்திப் பாடல்களையும் கேட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்று டெல்லி முதலமைச்சரும், அவருடன் சென்றவர்களும் தெரிவித்தனர்.

ஆனால் இது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சகர்கள் வைக்கும் வாதம் வேறு விதமாக உள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க மன்னிப்பு என்ற ஒரு ஆயுதத்தையே பயன்படுத்தினார். அதையே தற்போது பஞ்சாபிலும் பயன்படுத்த பார்க்கிறார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க