June 30, 2016
தண்டோரா குழு
மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ஐ.நா சபையில் நடைபெறவுள்ளது.
அமெரிக்க தலைநகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது. இங்கு உலகில் நிகழும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அதைச் சீர்செய்வதற்கான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படும்.
பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் இந்த ஐநா பொது சபையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்று விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமியின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது SUNSHINE இசைக்குழுவுடன் கலந்துகொண்டு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.