January 8, 2018 தண்டோரா குழு
சந்திரனுக்கு இரண்டு முறை சென்று திரும்பிய அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் யங் மரணமடைந்தார்.
அமெரிக்க நாசா மையத்தைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் ஜான் யங்(87) சில நாட்களாகவே நிமோனியா வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் (ஜன 5)காலமானார்.
விண்வெளி வீரர் ஜோன் யங், 1969ஆம் ஆண்டு அப்பலோ 10 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய போது அதில் பரிசோதனை அடிப்படையில் சென்றார். எனினும் அந்த விண்கலம் சந்திரனில் தரையிறங்கவில்லை. இதனையடுத்து நாசா, இரண்டு மாதங்களின் பின்னர் அப்பலோ 11 விண்கலத்தை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கியது.இதனையடுத்து இரண்டு முறை சந்திரனுக்கு சென்று திரும்பிய பெருமை அவரையே சேரும்.
நாசாவின் ஜெமினி, அப்பலோ, ஸ்பெஷல் ஷட்டில் உள்ளிட்ட விண்கலங்கள் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார்.அவருடைய மறைவுக்கு நாசா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.