December 26, 2016 எலிசபெத் டி சோஸா
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நேரிசில் சிக்கி 30 பேர் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் உலக புகழ் பெற்றதாகும். அக்கோவிலில் அதிகமானோர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து பதனம்திட்டா மாவட்ட ஆட்சியர் கிரிஜா கூறியதாவது: கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோர் கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த மூன்று பேர் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
41 நாள் மண்டல பூஜை திங்கள்கிழமை (டிசம்பர் 26) நிறைவடைவதால் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் கட்டியிருந்த கயிறு அறுந்து விழுந்ததால் அங்கு நின்றிருந்த மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதனால் 30 பேர் காயமடைந்தனர்.
மண்டல பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு மீது அலங்கரிக்கப்பட வேண்டிய நகைகளைக் கொண்டுவந்த ‘தங்கச் தேர்’ பவனியின் போது இந்த சம்பவம் நேர்ந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பம்பா முதல் சந்நிதானம் வரை கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், தேவஸ்வம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் சுவாமி ஐயப்ப சுவைமியைத் தரிசித்து விட்டு, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் பக்தர்களை சந்தித்தார்.
http://www.ndtv.com/kerala-news/at-least-20-sabarimala-pilgrims-injured-in-stampede-1641699