• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆஸ்திரேலியாவில் கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்து சாதனை

July 25, 2016 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் உள்ள கியீன்ச்லாந்து மடேர் மருத்துவமனையில் தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு ஆபரேசன் செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சுமார் 2,000 குழந்தைகளில் ஒரு குழந்தை ஸ்பைனா பிபிடா எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் குழந்தை தாயின் கருவில் வளரும்போது ஏற்படும் பாதிப்புதான் எனவும் இந்தக் குறைபாடு ஏற்படும் குழந்தைக்கு முதுகுத்தண்டு பிரச்சனை ஏற்பட்டு பின்னாளில் பக்கவாதம், கூன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்தக் குறைபாட்டை கருவிலேயே அகற்ற மருத்துவர்கள் முயற்சி செய்து வந்தனர்.

இந்நிலையில் இது போன்ற ஒரு குறைபாடுள்ள ஒரு குழந்தையுடன் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணை, கியீன்ச்லாந்து மடேர் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சையளிக்க முன்வந்தனர்.

சுமார் 40 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழு அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில் சிறப்பு என்னவென்றால், அந்தக் குழந்தை தாயின் கருவில் வளரத்துவங்கி தற்போது 24 வாரம்தான் ஆகிறது. அந்தக் குழந்தைக்கு முதுகுத்தண்டில் உள்ள குறைபாட்டிற்காக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இது குறித்து மடேர் மருத்துவமனை இயக்குனர் க்லென் கார்ட்னேர், இந்த அறுவை சிகிச்சை மூலம் தாய் மற்றும் சிசு நல்ல முறையில் காப்பாற்றப்படும் என உறுதியளித்தார். மேலும் இது வியாதியை உடனடியாக குணப்படுத்தும் என்பது கிடையாது, ஆனால் அவர்கள் வளர வளர இந்தச் சிகிச்சை மூலம் அவர்களுக்கு அனுகூலம் தெரியும் எனத் தெரிவித்தார்.

இது குறித்து மருத்துவர் ஜே வேல்லோன்ஸ் கூறும்போது, தாயின் யூட்ராஸ் துண்டிக்கப்பட்டு அதில் திரவம் செலுத்தப்படும் அப்போது கருவின் முதுகுப்பகுதி மேலே வரும் பின்னர் அங்கிருக்கும் குறைபாட்டிற்கு சிகிச்சை செய்துவிட்டு பின்னர் யூட்ராஸ் முன்பு போல தையல் போடப்படும் எனத் தெரிவித்தார். மேலும் இந்த அறுவை சிகிச்சை கரு வளர்ந்து 22 முதல் 25 வாரங்கள் ஆகியிருந்தால் மட்டுமே செய்யமுடியும் எனத் தெரிவித்தார்.

நரம்பியல் மருத்துவர் மார்டின் வூட் கூறும்போது, இந்தச் சிகிச்சை இந்தக் குழந்தைக்கும் அடுத்து இதே குறையுள்ள குழந்தைக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனத் தெரிவித்தார். மேலும் இந்தச் சிகிச்சையை அதன் அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதில் மருத்துவமனை முனைப்பாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க