October 11, 2017 தண்டோரா குழு
பெங்களூர் சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்துத் தமக்குத் தகவல் அளித்த கைதிகள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளதாக கர்நாடகக் காவல்துறைத் துணைத் தலைவர் ரூபா கூறியுள்ளார்.
பெங்களூரு சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா சசிகலாவிற்கு சிறையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக கூறி ஆதாரங்களை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபா,
பெங்களூர் சிறைக்குத் தாம் சென்றபோது சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து எண்ணற்ற கைதிகள் தம்மிடம் குறைகூறியதாகவும், 32பேர் அழுத்தமாகத் தங்கள் கருத்துக்களைக் கூறியதாகவும் தெரிவித்தார்.
ஆனால், அவ்வாறு தெரிவித்த கைதிகள் மாநிலத்தின் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும்,இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக விசாரணை நடத்துவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
மேலும், சிறையில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்களுக்குத் தக்க தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ரூபா கூறியுள்ளார்.