December 16, 2016 தண்டோரா குழு
ரூபாய் 5 லட்சம் வைத்திற்கும் வங்கிக் கணக்குகளை நிரந்தர கணக்கு எண்னுடன் (பான் எண்) இணைக்க வேண்டும் இல்லாவிட்டால் வங்கி கணக்கை இயக்க முடியாது என புதிய கட்டுப்பாட்டை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நவம்பர் 8ம் தேதி பழைய ரூபாய் 5௦௦ , 1௦௦௦ செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் எதிர்பார்த்த கறுப்புப் பணம் வங்கிகளில் டெபாசிட் ஆகவில்லை.
ஏழை, எளிய மக்களுக்காக மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஜன் தன் வங்கிக் கணக்குகளில் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சி நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தது. அதனை தடுக்க ஏழை மக்களுக்கான ஜன் தன் வங்கிக் கணக்கில் ஒரு மாதத்துக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாமல் இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்திருந்தது.
இந்நிலையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வங்கி கணக்குகள் நிரந்தர கணக்கு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வைத்திருப்பவர்களும், நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களும் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும்.
வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வைத்திருப்பவர்கள் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கும் வரை அல்லது படிவம் 60ஐ அளிக்கும் வரை தங்களது வங்கிக் கணக்கை இயக்க முடியாது.
அதே போல், 2016 நவம்பர் 8ம் தேதிக்கு மேல் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்திருக்கும்பட்சத்தில் அவர்களும் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்காமல் இருந்தால் அவர்களது வங்கி கணக்கை இயக்க முடியாது.
இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.