September 15, 2016 தண்டோரா குழு
இந்திய வம்சாவளி பெண் ஒருவர் அமெரிக்க நாட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளிப் பெண் டயான் குஜராத்தி(47). இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் நியூயார்க் தென் மாவட்ட அரசு வக்கீல் அலுவலகத்தின் குற்றப்பிரிவு துணைத் தலைவர் பதவியில் இருந்தார். இவரை தற்போது நியூயார்க் மாவட்டத்தின் நீதிபதியாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நியமித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதி ஒபாமா பேசுகையில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாவட்ட நீதிபதி பதவியில் பணியாற்றுவதற்கு டயான் குஜராத்தியை நியமிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் அமெரிக்க மக்களுக்கு மிகச் சிறப்பாக பணி ஆற்றுவார் என்று நான் திடமாக நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
டயான் குஜராத்தியின் தந்தை தாமோதர் குஜராத்தி, அமெரிக்காவில் வெஸ்ட் பாயிண்டில் உள்ள அமெரிக்க ராணுவ கல்லூரியில் பொருளாதார பேராசிரியர் பணியாற்றி வருகிறார்.
குற்றவியல் பிரிவில் உதவி அமெரிக்க வக்கீலாக கடந்த 1999 முதல் பணியற்றி வருகிறார் டயான். மேலும், 2008 முதல் 2012 வரை குற்றப்பிரிவு துணைத் தலைவராக இருந்த அவரது பதவிக்காலத்திற்கு முன், நியூயார்க் தெற்கு மாவட்ட வெள்ளை சமவெளி அமெரிக்கா அட்டர்னி அலுவலகத்தில் பிரிவின் தலைவராக பணியாற்றினார்.
மேலும், 2006 முதல் 2008 வரை, குஜராத்தி நியூயார்க் தெற்கு மாவட்ட அமெரிக்கா அட்டர்னி அலுவலகம் குற்றவியல் பிரிவுவின் துணை தலைமை அதிகாரி இருந்துள்ளார்.அவர் 1995 முதல் 1996 வரை, இரண்டாம் சுற்று மேல்முறையீட்டு அமெரிக்கா நீதிமன்ற அதிகாரியாக இருந்த மாண்புமிகு ஜான் எம் வாக்கர் ஜூனியர் என்பவரிடம் சட்டத்துறை எழுத்தராக தனது சட்ட தொழிலை தொடங்கினார்.
சட்ட இளநிலை பட்டத்தை கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பர்ணர்ட் கல்லூரியில் இருந்த பெற்றார். மேலும் 1995ம் ஆண்டு ஜுரிசிஸ் முனைவர் என்னும் பிரத்தியோக பட்டத்தை அமெரிக்காவில் உள்ள யால் சட்ட கல்லூரியில் இருந்து குஜராத்தி பெற்றார். மேலும், டயான் குஜராத்தியின் நியமனத்தை அமெரிக்க பாராளுமன்ற செனட் சபை அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.