• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பட்டாலியன்களின் எண்ணிக்கையை 239 ல் இருந்து 250 ஆக உயர்த்த திட்டம்

October 7, 2016 தண்டோரா குழு

இந்தியாவில் மத்திய ரிசர்வ் படை பட்டாலியன்களின் எண்ணிக்கையை 239ல் இருந்து 250 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதே போல் அதிவிரைவு படைகளின் எண்ணிக்கையும் 15 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குனர் துர்க பிரசாத் தெரிவித்துள்ளார்.

கோவை வெள்ளளூர் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படையின் ஓரு அங்கமான கலவர தடுப்பு அதிவிரைவு படை வளாகத்தில் அதன் 24 வது ஆண்டு விழா இன்று நடந்தது.இந்நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் படை இயக்குனர் துர்கபிரசாத் கலந்து கொண்டு கலவர தடுப்பு அதிவிரைவு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதனையடுத்து சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குனர் துர்க பிரசாத்,

மத்திய ரிசர்வ் படை பிரிவினர் எல்லை பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைகள், நக்சல் தடுப்பு போன்ற உள்நாட்டு பிரச்சனைகளுக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், ஜம்மு காஷ்மீரில் நிலவும் எல்லை பாதுகாப்பிலும் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். மத்திய ரிசர்வ் படைக்கு என தனியாக உளவு பிரிவு ஏற்படுத்தப்பட்டு அந்த தகவல்களின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது உள்ள அதிவிரைவு படைகளின் எண்ணிக்கையை 10 லிருந்து 15 ஆக அதிகரிக்கப்படும் என்றும், மத்திய ரிசர்வ் படை பட்டாலியன்களின் எண்ணிக்கையை 239ல் இருந்து, 250 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மகளிர் பட்டாலியன்களின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , மத்திய ரிசர்வ் படையில் கடந்த ஆண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட 9 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், இந்தாண்டு இதுவரை சுமார் 40 வீரர்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து குருடம்பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் மத்திய ரிசர்வ் படை இயக்குனர் துர்கபிரசாத் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க